Saturday, 28 February 2015

கவிதை

காலையில் சந்திரன்
மாலையில் சூரியன்
அவள் நினைவில்
வாழ்க்கை மாறியது
மாது பிரிந்தாள்
மதி தெழிந்தது...........


Wednesday, 25 February 2015

அம்மா

மாலை மலர
பூக்கள் அரும்ப
பதமாய் தென்றல்
இதமாய் சாரல்
மறையும் சூரியன்
காப்பியுடன் அம்மாவின்
பாசப் பிணைப்பில்.........!


Tuesday, 24 February 2015

கவிதை

காலை தென்றல்
மாலை மலர்
இரவு சந்திரன்
கனவு உன்னொடு
கலைவது எப்போது........!



Monday, 23 February 2015

காதல்

விழி கண்டு
வழி மறந்தாய்
பூ என்று
பூமி மறந்தாய்
நிலா கண்டு
நிலை மறந்தாய்
மான் என்று
மதி மறந்தாய்
விதி கண்டு
உனை மறந்தாள்


Sunday, 22 February 2015

ஒற்றுமை

சாதி மதத்தை மறந்து
ஒரே குலம் என்றிரு
இந்தியன் என்று ஒன்றுபட்டு
உலகம் நெகிழ நடந்திடு
"ஒன்று பட்டால் உண்டு வாழ்வு
இல்லையேல் அனைவரும் தாழ்வு"
என்ற பாரதியின் கனவை நனவாக்கு.