Wednesday, 25 March 2015

குடும்பம்

தாய்க்கு திகர் ஏதடா
தந்தைக்கு சமம் ஏதடா
உடன்பிறப்புக்கு சரிசமம் ஏதடா
குடும்பத்தை பிரிப்பதும் ஏனடா
பிரிந்தால் வாழ்வதும் ஏனடா
ஆறறிவும் உனக்கு உண்டோடா..............???????


Sunday, 22 March 2015

காதல்

தென்றலாய் வருடும் இசை
மழையாய் காதல் வரிகள்
கண் திறந்து கனவுகாண
மெல்லிசையாய் மனதில் நீ


Saturday, 21 March 2015

வெற்றிக்கனி

தோல்வியை கண்டு
கலையாதே நிலைக்குலையாதே
கூரிய வாளால்
தடைகளை தூளாக்கு
மௌனமாய் முன்னேறு
எட்டாக்கனியும் வெற்றிக்கனியாய்.................!




Monday, 16 March 2015

உனக்காக

கனவெல்லாம் கலைய
நினைவெல்லாம் நீயாக
உலகெல்லாம் உயிரெ
விழியெல்லாம் வழியில்
காத்திருப்பதெல்லாம் கள்ளியே
உனக்காக.........................


Sunday, 15 March 2015

நாடு

வெள்ளையன் பேய்
கொள்ளயன் கையில்
நம் நாடு
மாற்றம் வருமா...........................!


Wednesday, 11 March 2015

வாழ்க்கை

மழலை சிரிப்பு
மறந்து போச்சு
பருவம் பிறக்க
பயித்தியம் ஆச்சு
காதல் கனவு
கரஞ்சு போச்சு
பெண்ணின் வரவு
புண்ணா ஆச்சு
குடும்ப பாரம்
சுமையா போச்சு
மனித வாழ்க்கை
மண்ணா ஆச்சு
மண்ணும் பொன்னும்
நிலைக்காம போச்சு
வந்ததும் போறதும்
புதிர் ஆச்சு..................



Monday, 9 March 2015

காதல்

கயல்விழியே
உன் கருவிழிகள்
பார்ப்பதேதோ நினைப்பதேதோ
என் கருவிழியில்
உன்னை சுமக்கிறேன்


Sunday, 1 March 2015

தென்னங்கன்று

தீயோன் ஒருவனின் தீதால்
வளர்ப்பை குறைகுறும் உலகம்
இழிப்பெயர் சுமப்பவள் தாய்

தென்னங்கன்று இடியூன்று பாதித்தால்
தொங்காய் தந்த தெங்கை
இழிப்பதே இடியை பழிப்பதே!!!